குலதெய்வ கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை.!
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள தனது குல தெய்வம் அருங்கரை அம்மன் கோயிலில் இருந்து முதல் பிரச்சார பயணத்தை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடங்கினார்.
இதன் பின்னர் வாகனத்தில் ஏறி பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது.