மே.வங்காளம்: வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணை வேட்பாளராக அறிவித்த பா.ஜ.க!

Update: 2021-03-19 06:19 GMT

மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களும், புதுச்சேரி தேர்தலும் ஏப்ரல் 6 முதல் தொடங்க உள்ளன. சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து தகுதியான நபர்களை வேட்பாளர்களாக களம் இருக்க பா.ஜ.க பெரும் முனைப்பு காட்டி வருகிறது.

அதன் வேட்பாளர்களின் பின்புலம், வரலாறு ஆகியவையே தலைப்புச் செய்திகளில் அடிபடுகின்றன. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் பர்த்வான் கிழக்கில், ஆஷாகிராமிலிருந்து வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் கலித்தா மாஜி, கெருவ ஷிபிர தொகுதியின் பா.ஜ.க சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வியாழக்கிழமை அன்று இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பர்த்வான் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஆஷாகிராமம் சட்டமன்ற தொகுதியில் தனித் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக கலிதா மாஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஸ்காரா புர் பகுதியின் வார்டு எண் 3 இல் வசிக்கும் கலிதா, வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தான் வேலை செய்யும் வீடுகளுக்குச் சென்று தனக்கு ஒன்றரை மாத விடுமுறை கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு பிறகு அவர் பா.ஜ.க வேட்பாளரின் உள்ளூர் கட்சி அலுவலகத்துக்கு சென்றார். கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர். இது செய்திகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான வறுமை காரணமாக அவர் அதிக தூரம் கல்வி பயில இயலவில்லை. ஆரம்பப் பள்ளியின் எல்லைகளை கிடைப்பதற்கு முன்பாகவே அவர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. திருமணத்திற்குப் பிறகும் வறுமையில் உழன்றார். அவரது கணவர் ஒரு பிளம்பர். குடும்பம் முன்னேறவில்லை. எனவே அவர் ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்ய தொடங்க வேண்டியிருந்தது.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அந்த சிறுவன் எட்டாம் வகுப்பில் படிக்கிறான். மூன்று வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். காலையில் சூரியன் எழுந்தவுடன் வேலைக்கு சென்று சாயங்காலம் தான் திரும்பி வருவார். அவரது தந்தை இறந்துவிட்டார். ஒரு சகோதரி, ஒரு சகோதரர் உள்ளனர்.

இதுகுறித்து கலீதா கூறுகையில், "பணப்பற்றாக்குறையால் என்னால் படிப்பை முடிக்க முடியவில்லை. இந்த வருத்தம் எனக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இருப்பினும் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க, வாய்ப்பு அளிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வறுமையின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும்" என்றார்.

சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் துணை ஒருங்கிணைப்பாளர் சந்திரனாத் கூறுகையில், "எங்கள் கட்சி ஏழைகளின் நலன்களுக்காக போராடுகிறது. எங்க வேட்பாளர் வெற்றி பெறுவார் அதனால் உறுதியாக நம்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்

பா.ஜ.கவின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து, அந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Tags:    

Similar News