தமிழக போலீஸ் மற்றும் தி.மு.க. மீது தேசிய மகளிர் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார்!
தமிழக போலீஸ் மற்றும் திமுக மீது தேசிய மகளிர் ஆணையத்திடம் பாஜக நிர்வாகிகள் அதிரடியான புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
தமிழக போலீஸ் மற்றும் திமுக மீது தேசிய மகளிர் ஆணையத்திடம் பாஜக நிர்வாகிகள் அதிரடியான புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பாஜக பெண் தலைவர்கள் குறித்து திமுகவினர் சமூக வலைதளங்களில் மிகவும் அவதூறான வகையில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் தமிழக பாஜக கலை கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் குறித்து ஆபாசமான வகையில் திமுக ஐடிவிங் நிர்வாகி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்த நடவடிக்கைகளை போலீசார் எடுக்கவில்லை.
மேலும், தமிழக பாஜக செயலாளர் சுமதி வெங்கடேஸை போலீசார் தள்ளிவிட்டது மட்டுமின்றி அவரை தாக்கவும் ஒரு காவல்துறை அதிகாரி முற்பட்டார். இது பற்றிய வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தனது அதிகார துஷ்பிரயோகத்தை அடிக்கடி செய்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாஜக தமிழக தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (நவம்பர் 2) புது டெல்லி தேசிய மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ரேகா ஷர்மா அவர்களிடம் பாஜக பெண் தலைவர்களை தொடந்து அவதூறு செய்து வரும் திமுக நிர்வாகிகள் மீது தொடந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறையின் ஒரு சார்பு போக்கு குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இதில் தமிழக பாஜக செயலாளர் திருமதி.சுமதி வெங்கடேஷ், பாஜக கலை கலாச்சார பிரிவின் மாநில தலைவர் செல்வி காயத்ரி ரகுராம், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூரியா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு புகார்களில் ஒன்று பாஜக தமிழக செய்லாளர் திருமதி.சுமதி வெங்கடேஷ் அவர்களை ஒரு வாக்குவாதத்தின் போது தமிழக காவல்துறை அதிகாரிகள் தாக்கியது.
மற்றொன்று தமிழக பாஜக கலை, கலாச்சார் பிரிவின் மாநில தலைவர் செல்வி.காயத்ரி ரகுராம் அவர்களை தரக்குறைவாக சிந்தரித்து வீடியோக்கள் வெளியிட்ட திமுக நிர்வாகிகள் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சமாக செயல்படுவது, இந்த இரண்டு செயல்கள் குறித்து தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தகுந்த சட்ட தீர்வை நாடி தேசிய மகளிர் ஆணையத்திடம் இன்று புகார் அளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Bjp Facebook