பிரதமர் மோடி குறித்து பொய் செய்தி! கலைஞர் தொலைக்காட்சி மீது காவல் நிலையத்தில் பா.ஜ.க. புகார்!

பிரதமர் மோடியின் பெயருக்கள் கற்பிக்கும் விதமாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருப்பதாக காவல் நிலையத்தில் பாஜக மாநில பொருளாளர் சேகர் புகார் அளித்துள்ளார்.

Update: 2021-09-26 03:06 GMT

பிரதமர் மோடியின் பெயருக்கள் கற்பிக்கும் விதமாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருப்பதாக காவல் நிலையத்தில் பாஜக மாநில பொருளாளர் சேகர் புகார் அளித்துள்ளார்.

சென்னை தி.நகர் காவல் நிலையத்தில் அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: இரண்டு நாட்களுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சி ட்விட்டர் பக்கத்தில் அதானியின் துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்? என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவு உண்மைக்கு புறம்பானது, அவதூறானது, பிரதமர் மோடி மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தி. எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பது தெரிந்தே, பிரதமர் பெயருக்கு புகழுக்கும் பெயருக்கும் கற்பிக்கும் நோக்கத்தோடு, தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News