சிங்கவரம் ரங்கநாதர் கோயில் மலையில் வெடிவைத்த சம்பவம்: பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோயில். இந்த கோயில் அமைந்துள்ள மலைக்கு செல்வதற்கு வெடிவைத்து தகர்த்து பாதை அமைப்பதற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Update: 2021-11-24 02:17 GMT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோயில். இந்த கோயில் அமைந்துள்ள மலைக்கு செல்வதற்கு வெடிவைத்து தகர்த்து பாதை அமைப்பதற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

சிங்கவரம் ரங்கநாதர் கோயில் மலை மீது பாதை அமைப்பதற்காக அமைச்சர் மஸ்தான் வெடிவைத்து தகர்க்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மலை மீது வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மலையில் அமைந்துள்ள கோயில் எந்த நேரமும் இடிந்து தரைமட்டமாகும் என்ற செய்தியை சமீபத்தில் கதிர் வெளியிட்டிருந்தது. 


இதனிடையே சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: சிங்கவரம் ரங்கநாதர் கோயில் அமைந்துள்ள மலையில் பாதை அமைப்பதற்காக அரசின் அனுமதியின்றி பாறைகளை சிலர் வெடிவைத்து தகர்த்திருப்பதால், கோயிலுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு, காவல்துறை வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் செயலுக்கு தமிழக பாஜக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் ஏ.டி.ராஜேந்திரன், பொதுச்செயலர் பாண்டியன், துணைத் தலைவர் சதாசிவம், பொருளாளர் தியாகராஜன், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவர் தாஸ.சத்தியன், மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.சரவணன், நகரத் தலைவர் ராமு, செயலர் ஹிட்லர் மதன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: Twiter


Tags:    

Similar News