தமிழகத்தில் பா.ஜ.க. வளரும்: மாஸ் காட்டும் சென்னை 92வது வார்டு பெண் வேட்பாளர்!
தமிழகத்தில் பாஜகவுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது என்று சென்னை 92வது வார்டு பாஜக பெண் வேட்பாளர் கலைதேவி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வரளாது என்ற மாயத்தோற்றத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலையில் அது போன்ற பிம்பங்கள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு பிரதான எதிரி திமுகதான் என்றார். சென்னையில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் 92வது வார்டில் போட்டியிடும் கலைதேவியின் பிரசாரம் அமைந்துள்ளது. அவரது பேச்சு மற்றும் செயல்களால் ஆளும் கட்சியே மிரண்டுள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கலைதேவி, தமிழகத்தில் எப்போதும் பாஜக வளராது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் அந்த சூழல் தற்போது இல்லை. எங்களின் கட்சிக்கு எதிர்ப்பு மனநிலை இருக்கிறது என்ற பொய் பிரசாரம் இனிமேல் எடுபடாது. அப்படி சொல்கின்ற யாராக இருந்தாலும் எங்களுடன் களத்திற்கு நேரடியாக வந்து பாருங்கள் மக்கள் எங்களுக்கு எவ்வளவு ஆதரவு அளிக்கின்றனர் என தெரியும்.
மேலும், தமிழகத்தில் மாற்றம் தேவை என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். திமுக போன்ற கட்சிகள் தமிழகத்தில் பாஜக வளராது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். பாஜக ஓட்டு கேட்க சென்றால் மக்கள் புறக்கணிப்பார்கள் எனவும் கூறியுள்ளனர். ஆனால் எங்களுடன் வாங்கள் மக்கள் எங்களுக்கு எவ்வளவு வரவேற்பு அளிக்கின்றனர் என தெரியும். அனைத்து வேட்பாளர்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Asianetnews
Image Courtesy: Facebook