தே.மு.தி.க. விலகலால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!
சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதிகள் இறுதி செய்வது பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதே போன்று பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் பற்றியும் விவாதித்தனர்.
இதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தேமுதிக விலகி சென்றதால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி கண்டிப்பாக அமோக வெற்றி பெறும். மேலும், தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை பெறுவது தொடர்பாக பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.