நெசவாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு - அண்ணாமலை ஆதரவாக இறங்கினார்
நெசவாளர்கள் தி.மு.க ஆட்சியின் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
விவசாயிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு துன்பங்களை தான் அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகளை அடுத்து தற்போது நெசவாளர்களும் தி.மு.க ஆட்சியில் வஞ்சிக்க படுகிறார்கள் என்று தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "பொங்கலுக்கு இலவச வேட்டி,சேலை திட்டத்தை முடுக்கி நெசவாளர்களின் வஞ்சிக்க எண்ணுகிறது தி.மு.க அரசு. இதற்கு வழங்கப்பட்ட ரூ.487 கோடி 72 ஆயிரம் லட்சத்தை வெளி மாநில தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு பா.ஜ.க ஒன்றும் சும்மா இருக்காது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொன்றையும் கிடைப்பில் போடும் முயற்சிகளை தான் தி.மு.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளில் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்தது தி.மு.க., ஆனால் தற்பொழுது உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில், பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க உத்தரவிட்டதன் பெயரில் தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்டது.
தற்போது இலவச வேட்டி,சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க எண்ணுகிறது. ஏழை எளிய மக்களுக்கும், நெசவாளர் பெருமக்களுக்கும் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த விலையில்லா வேட்டி சேலை திட்டத்தை வைத்து தி.மு.கவிற்கும் ஆதரவாக, தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயன் பெறும் வகையில் தி.மு.க நடத்த எண்ணுவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar