ஆடிட்டர் ரமேஷ் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரத்ததானம்.!
ஆடிட்டர் ரமேஷ் மறைந்து இன்றுடன் 8வது ஆண்டாகிறது. அவரருக்கு இன்று 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.
தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013ம் ஆண்டு சேலத்தில் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை இந்தியாவை உலுக்கியது. தனது அலுவலத்தில் இருந்து வீடு திரும்பும்போது இந்த படுகொலை செய்யப்பட்டது.
இதனிடையே, ஆடிட்டர் ரமேஷ் மறைந்து இன்றுடன் 8வது ஆண்டாகிறது. அவரருக்கு இன்று 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர்களின் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.
இதன்பின்னர் அவரது நினைவை போற்றும் வகையில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை ரத்ததானம் செய்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலரும் ரத்ததானம் செய்தனர்.