'எங்கள் நேரம் வரும் காத்துக் கொண்டிருக்கிறோம்' - சூர்யா சிவா கைது விவகாரத்தில் தி.மு.க'விற்கு அண்ணாமலை எச்சரிக்கை

'ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை தொடுப்பது அரசுக்கு புதிதல்ல' என தி.மு.க'வை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Update: 2022-06-24 12:15 GMT

'ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை தொடுப்பது அரசுக்கு புதிதல்ல' என தி.மு.க'வை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா'வின் மகன் சூர்யா கைதுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா மகன் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க'வில் இணைந்தார், பா.ஜ.க'வில் இணைந்த இவருக்கு ஓ.பி.சி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்று சூர்யாவின் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த சம்பவம் தொடர்ந்து அன்று உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற இரு தரப்பையும் சமாதானப்படுத்தி போலீஸார் வைத்துள்ளனர்.



ஆனாலும் காரை சரி செய்வதற்கான பணத்தை கொடுக்க வேண்டும் என திருச்சி சூர்யாவின் மகன் சிவா சூர்யா தரப்பில் கேட்கப்பட்டதால் படமும் ஆம்னி பஸ் உரிமையாளர் தரப்பில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'பொய்யான வழக்கு தொடுப்பது யார் சிறந்தவர் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக்கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம் எங்கள் நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறோம்' என பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source - Annamalai tweet

Similar News