தமிழக மீனவ மக்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதம்!

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருக்கிறார்.

Update: 2023-03-14 00:52 GMT

தமிழகத்தின் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தற்பொழுது கைது செய்து இருக்கிறார்கள். இது தமிழகத்தில் பெரும் பேச்சு பொருளாகி இருக்கும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சொந்தமான இரண்டு மீன்பிடி படகுகளையும் அவர்கள் கையகப் படுத்துகிறார்கள். இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவ மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை தலையிட்டு இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் விற்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணமலை அவர்கள் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் எங்கு வெளி நாடுகளில் பாதிக்கப்பட்டாலும் முதல் ஆளாக ஓடி வந்து குரல் கொடுக்கும் அண்ணனாகவே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருந்து வருகிறார். அந்த வகையில் இந்த ஒரு நிகழ்விலும் மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை மீட்பதற்காக கடிதம் ஒன்றை மேலிடத்திற்கு அனுப்பி வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


விரைவில் இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் என்று நம்பிக்கையுடன் கூறப்பட்டு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் ஏழைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், குறிப்பாக தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஓடிவந்து உதவும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Input & Image courtesy:  Malaimalar

Tags:    

Similar News