தி.மு.க'வின் இரட்டை வேடம் - அம்பலப்படுத்திய அண்ணாமலை
இந்தி எதிர்ப்பு என்று கூறி தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு.
தி.மு.க தாய் மொழியை வளர்க்கவில்லை:
தமிழக அரசு தாய் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அடிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் தி.மு.க தாய் மொழியை வளர்க்கவில்லை அழித்துக் கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன்முறையாக இந்த போராட்டத்தை பா.ஜ.க முன்னெடுத்துள்ளது.
தமிழக முழுவதும் 60 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. மக்களுக்கு திமுகவின் சதி திட்டத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். தி.மு.கவின் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுவதற்காக இந்த போராட்டம், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதுவரை இத்தனை பேர் தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கி தலை குனிய வேண்டுமா?
தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிக்கப்படும் நிலை:
தமிழில் 2 லட்சம் இன்ஜினியரிங் உள்ளது. அதில் தமிழ் மொழியில் படிப்பதற்காக 1,377 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 50% மாணவர்கள் மட்டுமே அதில் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்று இவர்கள் கூறி, தமிழை வளர்க்க வளர்ப்பதற்காக எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. தமிழக மாணவர்கள் தமிழில் முதலில் நன்றாக தேர்ச்சி பெற வேண்டும். இதை விட்டுவிட்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றை செய்வதை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Dinakaran News