கச்சத்தீவை கேட்கும் உரிமை ஸ்டாலின் குடும்பத்துக்கு கிடையாது - சீறும் அண்ணாமலை

Update: 2022-05-27 06:30 GMT

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு மு.க.ஸ்டாலின் ஒரு சான்று. பிரதமர் மோடியை மேடையில் அமரவைத்து ஸ்டாலின் பேசிய பேச்சு அனைத்தும் ஒரு நாடகம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். அதனை தொடர்ந்து நேரு அரங்கத்திற்கு சென்ற பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. தொகை வழங்கவில்லை, கச்சத்தீவை மீட்க இது சரியான தருணம் என்று பேசினார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சை, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது பற்றி நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி நடந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஸ்டாலின், பிரதமரை மேடையில் அமரவைத்து விட்டு பேசியது அனைத்தும் அரசியல் நாடகம். இது தி.மு.க.வுக்கு கை வந்த கலை ஆகும்.

கடந்த 1947ம் ஆண்டு திட்டம் போட்டு கருணாநிதி, இந்திரா காந்தியும் சேர்ந்து கச்சத்தீவைத் இலங்கைக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்தனர். அதன் பின்னர் 1976ல் இவர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி முழுமையாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டு எவ்வளவு தைரியம் இருந்தால் மேடையில் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என கூறுவார்? கச்சத்தீவை மீட்க சொல்லும் உரிமை தமிழர்களுக்கு உண்டு. ஆனால் ஸ்டாலின் குடும்பத்திற்கு அத்தகுதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News