போலீசார் கடுமையாக இல்லையெனில் யாரும் வெளியில் செல்ல முடியாது - அண்ணாமலை!
போலீசார் கடுமையாக இல்லை என்று யாரும் வெளியில் செல்ல முடியாது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
சென்னையில் மாத்தூரில் தமிழக பா.ஜ.க சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளருக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், மதுரையில் அரசு கல்லூரியின் முன்பாக தந்தையை அடிக்கும் வீடியோ காட்சி பார்த்த பொழுது நம் சமுதாயம் இந்த அளவிற்கு கெட்டுப் போய் இருப்பது என்று கேள்வி எழும்பியது.
காவல்துறையின் மீது எள் அளவிற்கு பயம் கிடையாது. பெண்கள் மீது மாணவர் என்று போர்வையில் அந்த கயவன் நடந்து கொள்கிறான். அதன்பின் மாணவியின் தந்தையை கடுமையான முறையில் தாக்குகிறான். அதன்பின் மாணவியின் தந்தையுடன் கலகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது புதிதான ஒரு விஷயம் கிடையாது. பல்வேறு மாவட்டங்களில் இது மாதிரியான சம்பவங்கள் நிறைய அரங்கேறி இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தமாக போலீஸ் அதிகாரிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் பயம் தற்போது இருப்பதில்லை.
போலீஸ் அதிகாரிகள் சற்று கடுமையாக தான் நடந்து கொள்ள வேண்டும். இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் இந்த சமுதாயம் இந்த மாதிரியான பாதைகளில் நடக்க ஆரம்பித்து விடும். தப்பு செய்பவர்களை தண்டிக்கும் பொழுது கண்டிப்பாக தான் நடந்து கொள்ள வேண்டும். எனவே கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றால், தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்தேறி கொண்டு தான் இருக்கும். ஆர்.எஸ்.எஸ் என்பது சாமானிய மக்களுக்காக தமிழகத்தில் அரசு செய்யும் வேலை செய்யும் சேர்த்து அரசுக்கு பின்னால் இருந்து கொண்டு செய்து வருகிறது. இதனால் அமைச்சர் சேகர்பாபு சொல்வதை எல்லாம் நீங்கள் பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Nakkheeran News