நேரம் பார்த்து செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை கொடுத்த அடி..
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோகும் சூழ்நிலையில் இருக்கிறதா?
2014ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது மிகப்பெரிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. எனவே போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் லஞ்சம் தொகை வாங்கி இருந்ததாகவும் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தது. ஜூலை 30, 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அவர் ஊழலாக பெற்ற தொகை திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக கூறி அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. எனவே இந்த ஒரு வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இதில் தவறு நடக்கக்கூடியதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய மறுத்தது ஏன்? அது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஊழல் என்பது அரசிற்கும் சமுதாயத்திற்கும் எதிரானது எனவும், அதை அனுமதிக்க முடியாது என்று தற்பொழுது கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும், வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்து இருக்கிறது. திமுகவில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி காப்பாற்ற தமிழக அரசும், போலீசும் முயற்சி செய்து வருவது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது என்று பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த ஒரு வழக்கில் அமலாக்கத் துறையும் இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தன்னுடைய விசாரணையை தொடர இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் பட்சத்தில் அவர் மீது போலீஸ் விசாரணை எந்த மாதிரியாக நடக்கும்? எனவே அவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆவேசமாக கூறியிருக்கிறார். சட்டவிரோதப் பணப் பரிமாற்ற மோசடி நடந்திருப்பதால். செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்திருந்தது. எங்கு உண்மை வெளிவந்து விடுமோ? என்ற ஒரு பயத்தில் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கு துறை விசாரணைக்கு எதிராக தடை பெற்று இருக்கிறார். இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் தமிழக காவல்துறை இந்த ஒரு விவகாரத்தில் தலையிட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து இரண்டு மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஏற்கனவே வாட்ச் பில் விவகாரத்தில் குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்ட கேள்விக்கு பதிலாக தன்னுடைய வாட்ச் பில்லையும் வெளியிட்டு, மேலும் திமுக அரசின் ஒன்னரை லட்சம் கோடி ஊழல் பட்டியலையும் வெளியிட காரணமாக அமைந்தது. அந்த வகையில் தற்போது இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி அண்ணாமலை அவர்களிடம் சிக்கி இருக்கிறார். தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்து விடுமோம், அண்ணாமலை சொன்னதை செய்து விடுவாரா? என்ற பயத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்து இருக்கிறது.
Input & Image courtesy: News