ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க. தலைவர் கடிதம்.!

தமிழகத்தில் ராகுல்காந்தி எம்.பி., பிரச்சாரத்திற்கு தடை விதிப்பதோடு, வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-03-05 04:13 GMT

தமிழகத்தில் ராகுல்காந்தி எம்.பி., பிரச்சாரத்திற்கு தடை விதிப்பதோடு, வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.




 


சமீபத்தில் கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பிரச்சாரச் மேற்கொண்டார். அப்போது பள்ளியில் சென்று மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை தற்போது உள்ள மத்திய அரசுடன் ஒப்பிட்டு, மற்றொரு சுதந்திர போராட்டத்திற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசினார்.


 



எனவே பொதுமக்கள் மத்தியில், பிரிவினையும், கோபத்தையும், பயத்தையும் தூண்டியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி ராகுல்காந்தி மீது, இராஜ துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டம் 124ஏ, பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தண்டனைச் சட்டத்திற்கு ஆயுள் தண்டனை வரையில் கிடைப்பதற்கு வழிசெய்யும் என கூறப்படுகிறது.

அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், விசிக, உள்ளிட்ட கட்சிகள் நாகரீகத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து நடப்பது அவசியம் ஆகும்.

Similar News