அன்பு தமிழ் சொந்தங்களே.. பா.ஜ.க.வின் தூண்களே.. மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம்.!
மனம் தளராமல் ஆராய்ந்து, துணிந்து, செய்யத்தக்க வேலையை சோர்வு கொள்ளாமல், காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும் என்கிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளூவர். துணிவுடன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்ற வேண்டிய நேரமிது.;
பாஜக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அன்பு தமிழ் சொந்தங்களே, பாஜகவின் தூண்களே,
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்
மனம் தளராமல் ஆராய்ந்து, துணிந்து, செய்யத்தக்க வேலையை சோர்வு கொள்ளாமல், காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும் என்கிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளூவர். துணிவுடன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்ற வேண்டிய நேரமிது.
ஜன சங்கம் தொடங்கியதிலிருந்து இந்த இயக்கத்திற்காக பலர் உழைததுள்ளனர். தங்கள் வாழ்வையே அர்பணித்துள்ளனர். பெருங்கோயிலை கட்ட பல திறமையும், தியாகமும் தேவை. அது போலவே தமிழக பாஜக என்ற கோயில் பல காரிய கர்த்தாக்கள் தங்கள் இன்னுயிரையும் நீர்த்த வேள்வியில் உருவானது.
தமிழக பாஜகவின் திரளான தொண்டர்களின் கூட்டம் இன்று போற்றலுடன் ஒரு கடல் போல பொங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியினால் 20 வருடங்கள் கழித்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம்.
நான்கு என்பது நூற்று ஐம்பதாக மாற வேண்டும். நாம் மாற்றி காட்ட வேண்டும். ஒற்றை தலைமையோ, குடும்ப அரசியலோ இல்லாத ஒரே கட்சி பாஜக. நம் கட்சியில் திறமைக்கு மட்டுமே என்றும் முக்கியத்துவம். தகுதி உள்ளோர், தகுதியை வளர்த்து கொள்ள துணிந்தோருக்கான கட்சி நம் பாஜக. பாஜகவில் தமிழகத்திலும், நாடெங்கிலும் தகுதி உள்ளோர் தலைமை பொறுப்பிற்கு தக்க தருணத்தில் சென்றிருக்கிறார்கள். தலைமை இடம் என்பது மக்களுக்கு சேவை செய்ய வழங்கப்படும் தக்க தருணத்தில் சென்றிருக்கிறார்கள்.