அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? சட்டத்தை வாபஸ்பெற ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த சுப்பிரமணியசாமி!
Subramanian Swamy Warns.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் வாயிலாக 29 ஓதுவார்கள் உட்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த சட்ட மசோதா அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. ஆனால் வழக்குகளால் அச்சட்டம் நிறைவேற முடியாமல் போனது. இதனிடையே 51 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டியில் கூறியதாவது: திமுக மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது திக ஆட்களின் பிடியில் சிக்கி தவறான செயல்பாடுகளை அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார்.
ஏற்கனவே சென்னை கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். அந்தப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும் அந்த விவகாரத்தில் பின்வாங்கினார். இதனிடையே திக சொன்னத்தை கேட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை ஸ்டாலின் கையில் எடுத்து தற்போது 58 பேருக்கு அவசரமாக பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.
இதனை திக உள்ளிட்ட கட்சியினர் போற்றி வரவேற்றுள்ளனர். தற்போது 51 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஈவெராவின் கனவையும், கருணாநிதி லட்சித்தை நிறைவேற்றியுள்ளதாக கூறி வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை, அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு அறங்காவலருக்குதான் உண்டு, எனவே இதனை ஸ்டாலின் தனது இஷ்டத்துக்கு செய்ய முடியாது. நீதிமன்றம் சென்று வழக்க தொடர உள்ளேன். பின்னர் உச்சநீதிமன்றம் வரை செல்ல உள்ளேன். நீதிமன்றம் சென்று கண்டிப்பதற்கு முன்னர் இதனை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2824928