பேரிடர் நிவாரண நிதி பற்றி புரிதல் இல்லாத அமைச்சர் ! - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த ஒரு சில வாரங்களாக பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்துவிட்டு வீடுகளிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனிடையே தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக ஆண்டுக்கு ரூ.1,360 கோடியை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 2020, 21ம் ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி சுமார் 300 கோடி நிலுவையில் இருப்பதாக கூறியிருந்தார்.
இதனிடைய தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, திமுக அமைச்சருக்கு புரிகின்ற வகையில் ஒரு விளக்கம் ஒன்றை ட்விட்டர் மூலமாக அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு அமைச்சர் அவர்களே!
தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி!
2020,21ம் ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி 1,360 கோடி! இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை ஜூலை 31ம் தேதி அளித்துவிட்டது.
நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம் முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்! உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன்!
நன்றி வணக்கம்! என்று தனது ட்விட்டர் பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
Source, Image Courtesy: Twiter