அரசியல் எதிரிகளை பழிவாங்கும் போக்கை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் - எச்சரிக்கும் வானதி சீனிவாசன் !
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் எம்.எல்.ஏ., ஹாஸ்டல், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு அதிமுக மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் எம்.எல்.ஏ., ஹாஸ்டல், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு அதிமுக மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதீ சினிவாசன் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும் அதே சமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வந்தது.
குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதல்வருமான திரு.முகஸ்டாலின் அவர்கள் திரு எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது தனிப்பட்ட முறையிலேயே மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் திரு.எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்கின்ற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பிரச்சாரத்தின்போது பேசி வந்தார்கள்.
அதற்குப் பின்பாக தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதிகூட திமுக பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு எஸ்.பி.வேலுமணிதான் மிக முக்கிய காரணம் என திமுக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக அவர் மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.