எங்களுடைய திட்டத்தை புதிதாக அறிவித்த ஸ்டாலின்.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு.!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை புதியது போன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-03-08 11:56 GMT

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை புதியது போன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.




 


இது தொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கருணாநிதி சொன்னார். அதனை நிறைவேற்றினார்களா? நகைக்கடன் ரத்து செய்யப்படும் என கடந்த 2019ம் ஆண்டு எம்.பி.தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?




 


ஏற்கெனவே நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகரங்களில் வீடு கட்டித் தரும் திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது.

மேலும், கிராமங்கள் தோறும் இணையதளம் மூலம் இணைக்கின்ற பாரத்நெட் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் பாஜக செயல்படுத்தி வரும் திட்டங்களை புதியது போன்று மற்றும் தொலைநோக்கு திட்டம் என்று ஸ்டாலின் அறிவித்து நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News