கொரோனா சமயத்தில் பா.ஜ.க.வினர் மக்களுக்காக உழைத்தபோது தி.மு.க தனிமைப்படுத்திக் கொண்டது! - பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா!

கொரோனா தொற்று ஏற்பட்டபோது தமிழக பாஜகவினர் பொதுமக்களுக்காக தங்களை அர்ப்பணித்தனர். ஆனால் திமுகவினர் தங்களின் உயிர்களை மட்டும் பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்திக்கொண்டனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2021-11-24 12:22 GMT

கொரோனா தொற்று ஏற்பட்டபோது தமிழக பாஜகவினர் பொதுமக்களுக்காக தங்களை அர்ப்பணித்தனர். ஆனால் திமுகவினர் தங்களின் உயிர்களை மட்டும் பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்திக்கொண்டனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசியதாவது: மிகவும் சிறப்பு வாய்ந்த தமிழக செயற்குழுவில் கலந்து கொண்டதில் பெருமையடைகிறேன். திருப்பூர் மாவட்டம் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கியது என்றார். அதிலும் திருப்பூர் குமரன் தனது வாழ்வை சுதந்திரத்திற்காக அப்பணித்தார்.


மேலும், தமிழகத்தில் திமுக குடும்ப அரசியல் நடத்தி வருகிறது. அதிலும் ஊழல் பல வருடங்களாக உள்ளது. நமது கட்சி குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறது. முன்னேற்றத்திற்காக பாஜக தன்னை அர்ப்பணித்துள்ளது. மேலும், திமுக அரசு தமிழக கலாச்சாரத்தையும், பண்டிகையும் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பக்தர்களை கோயிலில் அனுமதிக்காமல் வைத்திருந்தது. அதனை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தி பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழிவகை செய்தது.

உலகளவில் தமிழை பிரதமர் மோடி கொண்டு சென்றார். தொற்று உச்சத்தில் இருந்தபோது 9 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு கொரோனா தடுப்பூசியை கண்டுப்பிடித்து தற்போது கொரோனா என்ற நோய் இல்லாமல் செய்துள்ளார். பல கோடி உயிர்களை பாதுகாத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஊசியை வைத்து பொதுமக்களிடம் பயமுறுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News