இந்திய ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகின்ற 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வருகின்ற 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இதே போன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பா.ஜ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க., பாராளுமன்ற குழு நாளை கூடி முடிவு செய்கிறது. துணை ஜனாதிபதியாக யாரை நிறுத்தலாம் என்ற முடிவும் சில நாட்களில் வெளியாகலாம் என தெரிகிறது.
Source: Maalaimalar
Image Courtesy: India Tv News