மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர் மீது பா.ஜ.க. புகார்!

Update: 2022-04-06 10:38 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியதாக விஷம பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அதாவது வீடு மற்றும் கடைகளுக்கு ஜி.எஸ்.டி. அதிகரிக்கப்படும் எனவும், இதனை கவுன்சில் கூட்டத்தில் விரைவில் அறிமுகம் செய்வார் நிதியமைச்சர் என்று அவரது படத்துடன் பதிவு செய்துள்ளனர்.

மேலும், நீலகிரி மலை ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளதால் அதில பயணம் செய்பவர்களுக்கு 3000 ரூபாய் கட்டணம் பெற வேண்டும் என்றும், அது போன்று எடுக்க முடியாதவர்கள் எதற்காக ஊட்டிக்கு செல்ல ஆசைப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News