ஒப்பந்ததாரர்கள் மீது மட்டுமே தி.மு.க. கவனம் செலுத்தியது, வடிகால்களை சுத்தம் செய்யாமல் ஏமாற்றிவிட்டது! - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுகவிற்கு இப்போது உண்மையை எடுத்துச் சொல்பவரை வசைபாடுவது தவிர வேறு எதுவும் தெரியவில்லை. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.;

Update: 2021-11-11 10:08 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக அரசும் அவர்களுடைய செய்தியாளர்களும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடைய முதலாளியின் கட்டளைக்கிணங்க பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் திமுக எம்எல்ஏ க்களும் முதலமைச்சரும் தங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று. பொதுவாக ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கவேண்டிய வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி இந்த வருடம் மெத்தனமாக இருந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 25% வடிகால்கள் கூட முழுமையாக சுத்தம் செய்யப்படவில்லை.

மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் மேற்பார்வையாளர் களும் அமைக்கப்படவில்லை. திமுக அரசாங்கம் வழக்கம்போல தந்திரமாக கடந்த 6 மாதங்களில் அவர்களுடைய முழு கவனமும் 'ஒப்பந்ததாரர்கள்' மேலும், அதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றி மட்டும்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர களப்பணிகளில் சுத்தமாக அவர்களுக்கு அக்கறை இல்லை. துரதிஷ்டவசமாக, திமுகவின் செய்யும் தவறுகளுக்கு சென்னை மக்கள் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எல்லாம் சரியாகி விட்டது என்ற ஒரு பொய்யான பிம்பத்தை திமுக அரசு எல்லா பக்கமும் பரப்பிக் கொண்டிருக்கின்றது. திமுக அரசின் அதிகபட்ச முன்னுரிமை பெறக்கூடிய முதலமைச்சர் அவர்களுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூட மழை வெள்ள பாதிப்புகளை ஒரு படகின் மூலமாகத்தான் பார்வையிட முடியும் என்ற அளவிற்கு மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

திமுகவிற்கு இப்போது உண்மையை எடுத்துச் சொல்பவரை வசைபாடுவது தவிர வேறு எதுவும் தெரியவில்லை. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook


Tags:    

Similar News