தி.மு.க.வை அசைக்க 100 பூத் தலைவர்களே போதும்! பங்கம் செய்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
1000 பாஜக தலைவர்கள் வந்தாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியான பதிலை அளித்துள்ளார்.;
1000 பாஜக தலைவர்கள் வந்தாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியான பதிலை அளித்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, 1000 பாஜக தலைவர்கள் வந்தாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். ஆனால் அவர்களை 100 பூத் தலைவர்களை அனுப்பி வைத்து திமுகவை அசைத்து காட்டுவோம் என்றார்.
அடிக்கடி அமைச்சர் சேகர்பாபு குழம்பி விடுகிறார். முதலமைச்சர் மனைவி எப்படி கோயிலுக்கு அழைத்து செல்வதற்கு அக்கரை காட்டுகிறாரோ அதே போன்று சாதாரண மக்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Kumudham
Image Courtesy: Bjp President Annamalai Twiter