தி.மு.க அரசின் செயலை கண்டித்து பா.ஜ.க அறப்போராட்டம்: அரசின் குறைகளை சுட்டி காட்டினால் இப்படி செய்வதா என சீறும் அண்ணாமலை?
தி.மு.க அரசின் செயலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க தரப்பில் அறப்போராட்டம்.
தி.மு.க அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்கிறார். அரசின் குறைகளை சுட்டி காட்டினால் அவர்களை தற்பொழுது சிறுபிள்ளைத்தனமாக சிறைகளை காட்டி மிரட்டுகிறார்கள் தி.மு.கவினர். ஆனால் அதற்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார். குறிப்பாக தி.மு.க ஆட்சியில் கருத்து சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் எதிர்க் கொண்டு 14 ஆம் தேதி முதல் தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிட பா.ஜ.க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தி.மு க அரசின் குறைகளை சுட்டி காட்ட முயற்சி செய்தால் அவர்கள் தங்களுடைய கருத்து சுதந்திரத்தை கடுமையாக தாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ந்து தி.மு.க அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் இன்று மாலை அறப்போராட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் மாற்று கட்சி தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் ஆளும் தி.மு.க அவர்களை பணிய வைக்க நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. ஜனநாயக கடமை ஆற்றும் மாற்று கட்சி தலைவர்கள் எல்லாரும் தொடர் வழக்குகளால் மிரட்டப்படப் பார்க்கிறார்கள். ஆட்சி மன்றம் கையில் இருப்பதினால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக தி.மு.க அரசின் மீது தன்னுடைய குற்றச்சாட்டை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Oneindia News