தி.மு.க. அரசு உயர்த்திய சொத்து வரியை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Update: 2022-04-08 11:08 GMT

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 150 சதவீதமாக சொத்துவரியை உயர்த்தி மக்களை மிகப்பெரிய துயரத்திற்கு தள்ளியது. இதனை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழக பாஜக சார்பில் இன்று (ஏப்ரல் 8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மற்றும் நாகர்கோயில் எம்.எல்.ஏ., காந்தி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் திமுக அரசு உயர்த்தி சொத்து வரியை உடனடியாக திரும்பபெற கோரி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பேசியதாவது: சொத்துவரி உயர்வை திமுக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்வும். தற்போது 150 சதவீத உயர்வு என்பது சாதாரண விஷயமல்ல. தற்போது கொரோனா காலக்கட்டமாக இருக்கும் நிலையில் இது போன்ற உயர்வு என்பது பொதுமக்களை மிகப்பெரிய பாதிப்புக்கு தள்ளப்படும். எனவே உடனடியாக சொத்து வரியை திரும்பபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News