மயிலாடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கல்.. பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்.!

பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமர் மோடி ரேஷன் கடைகளில் வருகின்ற நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தாணியங்களை வழங்க உத்தரவிட்டார்.

Update: 2021-06-30 10:26 GMT

கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு அறிவித்த இலவச அரிசியை முழுமையாக வழங்ககோரியும், ரேஷன் கடைகளில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமர் மோடி ரேஷன் கடைகளில் வருகின்ற நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தாணியங்களை வழங்க உத்தரவிட்டார்.


 



இந்த நிவாரணங்களை பல்வேறு மாவட்டங்களில் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமற்ற நிலையில் அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Similar News