முதல் முறையாக மைசூரு மாநகராட்சியை கைப்பற்றிய பா.ஜ.க !

மைசூரு மாநகராட்சியின் புதிய மேயராக பாஜகவை சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பாஜ முதல் முறையாக மைசூரு மாநகராட்சியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

Update: 2021-08-26 04:42 GMT

மைசூரு மாநகராட்சியின் புதிய மேயராக பாஜகவை சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பாஜ முதல் முறையாக மைசூரு மாநகராட்சியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

மஜத, காங்கிரஸ் கூட்டணி மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியது கடந்த ஆண்டு. ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் போலியான சொத்து விவரங்களை தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், மேயராக பதவியேற்றிருந்த மஜதவின் ருக்மினி மாதே கவுடாவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சியில் மேயர் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், காலியாக இருந்த மேயர் பதவிக்கு மைசூரு மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. மொத்த கவுன்சிலர் எண்ணிக்கை 65 ஆக இருந்தது. இதில் ருக்மினி மாதே கவுடா பதவி இழந்த காரணத்தினால் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 64 ஆக இருந்தது.

அது மட்டுமின்றி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உட்பட 8 பேர் சேர்த்து 72 பேர் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர்.

இதில் பாஜகவுக்கு 22 கவுன்சிலர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்று 25 பேராக இருந்தனர். காங்கிரசுக்கு 19 கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ. என்று 20 பேர் இருந்தனர். மேலும் மஜதவிற்கு 17 கவுன்சிலர்கள் 3 எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி. என்று 21 பேர் இருந்தனர்.

இதில் ஐந்து சுயேச்சை கவுன்சிலர்கள் இருந்தனர். இரண்டு பேர் மஜதவுக்கும், ஒருவர் பாஜகவுக்கும் ஆதரவாக இருந்தனர்

தேர்தல் அதிகாரியான பிரகாஷ் தேர்தல் நடைமுறைகளை செய்திருந்தார். அப்போது பாஜக வேட்பாளராக சுனந்தா பாலநேத்ரா காங்கிரஸ் சார்பில் சாந்தகுமார், அஸ்வினி ஆன்ந்த் ஆகியோர் மேயர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே மேயர் பதவி வழங்குவதில் இழுபறி நீடித்து வந்ததால் மஜத, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்துக் கொண்டது. இறுதியாக பாஜகவின் சுனந்தா பாலநேத்ரா 26 ஓட்டுகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் கடந்த 38 ஆண்டு வரலாற்றில் பாஜக முதல் முறையாக மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2830849

Tags:    

Similar News