வேலூர் எம்.பி தொகுதியை குறி வைத்து தேர்தல் பணிகளில் தீவீரம் காட்டும் பா.ஜ.க - ஏன்?

Update: 2022-07-12 12:34 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழத்தில் பெரும்பாலான தொகுதியில் போட்டியிடுவதற்கு பா.ஜ.க., தீவிரம் காட்டி வருகிறது. அதே போன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க., விருப்பம் காட்டி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் பா.ஜ.க., தீவிரம் காட்டி வருவது மற்ற கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க., மாநில செயற்குழு கூட்டம் வேலூர் மாநகரில் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் உள்ள பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று வேலூர் வள்ளலார் நகரில் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் பா.கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன் மற்றும் சிறப்பு பார்வையாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எல்லா தொகுதியிலும் பா.ஜ.க.வை பலப்படுத்துவது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது பற்றிய ஆய்வுகளும் செய்யப்பட்டது. இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy:Mint

Tags:    

Similar News