தி.மு.க. எம்.பி.க்களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!
திமுக எம்.பி.களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் என்பவர் மீது இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம் ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம் நேற்று முன்தினம் இரவு (அக்டோபர் 8) வள்ளியூரை அடுத்த காவல் கிணறு அருகே ஏவிஎம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த, பாஜக நிர்வாகி, ஆவரைகுளம் பாஸ்கரன் அவர்களை அவரே நேரடியாகச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, அங்கிருந்த கேமராக்களையும் அடித்து நொறுக்கி சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அத்துடன் விடாமல் கடைக்கு வெளியே காரில் உட்கார்ந்து கொண்டு பாஸ்கரன் வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து என்று கடையில் காத்திருந்து, பின்னர் மருத்துவமனைக்கு செல்ல பயந்து நேரடியாக தன் வீட்டிற்கு சென்றிக்கிறார்.
நெல்லைக்கு செல்லும் வழியில் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அவர் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லவில்லை. இன்று காலை மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.
திமுக எம்.பி.களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் என்பவர் மீது இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம் ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார். இவர் மீதும் கடுமையான வழக்கு பதிவு செய்து காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.