தி.மு.க ஆட்சியில் மட்டும் பயங்கரவாத சம்பவம் நடப்பது ஏன்? - அண்ணாமலை
தி.மு.க ஆட்சியில் மட்டும் பயங்கரவாத சம்பவம் நடப்பது ஏன்? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் கேள்வி:
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் NIA விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும், தி.மு.க ஆட்சியின் மட்டும்தான் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுகிறது., அது ஏன்? என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள்.
1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது ஒரு வாரம் முன்பு இதே மாதிரி ஒரு அறிக்கை அறிவிப்பு வந்தது என்று கூறப்பட்டது. அந்த சர்ச்சை இன்றும் தொடர்கிறது. எப்படி இது போல் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பயங்கரவாத தாக்குதல்கள் இவை எல்லாம் தி.மு.க ஆட்சியில் மட்டும் நடக்கிறது. ஏனெனில் உள்துறையின் மீது கவனம் இல்லை. சமூகவிரோதிகள் சக்திகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். முதலமைச்சர் நல்லவராக இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் நல்லவராக இருக்க வேண்டும்.
முதலமைச்சரை ஏமாற்ற நினைக்கிறார்கள்?
வேண்டியவர்களுக்கெல்லாம் பதவிகளை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி பதவி பெற்றவர்கள் என்ன ஆலோசனை? தர முடியும். எனவே தன்னை சுற்றி இருப்பவர்கள் குறித்து முதலமைச்சர் ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும். என்னை பற்றி தவறாக பேசுவது தான், அவர்களது முதல் வேலை. முதலமைச்சரை ஏமாற்ற நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை நீக்கி விட்டுவிட்டு, வேறு ஆட்களை நியமியுங்கள். தமிழகத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar News