ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றிய டெல்லி காங்கிரஸ்: பா.ஜ.க தொண்டர்கள் மகிழ்ச்சி!
ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றிய டெல்லி காங்கிரஸ்: பா.ஜ.க தொண்டர்கள் மகிழ்ச்சி!
பா.ஜ.க தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தியாக, ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்குவதற்காக ஒரு தீர்மானத்தை டெல்லி காங்கிரஸ் குழு ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியது. தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி, "ராகுல் ஜி மட்டுமே காங்கிரஸ் தொண்டர்களை ஊக்குவிக்க முடியும். விவசாயிகள் பிரச்சினை முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பாதிப்புகள் வரை அவரது கணிப்புகள் அனைத்தும் நிறைவேறி வருகின்றன. அவர் தனது தலைமையைக் காட்டியுள்ளார் எனவே அவரை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க தீர்மானத்தை நிறைவேற்றினோம். "
Delhi Congress passes resolution to make Rahul Gandhi President of the party from immediate effect.
— ANI (@ANI) January 31, 2021
Rahul ji is only one who can inspire Congress workers. All his predictions are coming true from farmers issue to ills of GST. He's shown his leadership ability. So we passed resolution to make him Congress president again: Delhi Pradesh Congress Committee President Anil Chaudhary https://t.co/FjfBOEUMJn pic.twitter.com/c3tlSTee2B
— ANI (@ANI) January 31, 2021
வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் தேர்தல்கள் முடிந்த பின்னர் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இந்தத் தீர்மானம் வந்துள்ளது.
மக்களவை தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்ததையடுத்து, வயநாட்டைச் சேர்ந்த எம்.பி.யான ராகுல் காந்தி, 2019 ல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அன்றிலிருந்து கட்சியின் தலைவராக மீண்டும் வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ராகுல் பதவி விலகியதிலிருந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார் அவரது தாயார் சோனியா காந்தி.