வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்! தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதே போன்று அதிமுக உறுப்பினர்களும் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், வேளாண் மக்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஆனால், மாநில அரசு உள்நோக்கத்தை கற்பித்து, அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Topnews
https://www.puthiyathalaimurai.com/newsview/114082/bjp-walk-out-from-assembly-to-Resist-farmers-law-resolution