பத்மநாபபுரம் நகராட்சி: 7 வார்டுகளை கைப்பற்றி திராவிட கட்சிகளை ஓடவிட்ட பா.ஜ.க.!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் பாஜக 7 வார்டுகளை கைப்பற்றி திராவிட கட்சிகளை தற்போது ஓடவிட்டுள்ளது.

Update: 2022-02-22 06:51 GMT

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் பாஜக 7 வார்டுகளை கைப்பற்றி திராவிட கட்சிகளை தற்போது ஓடவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியுடன் களம் கண்டது. ஆனால் பாஜக தனித்து களம் இறங்கியது. அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தாமரைக்கு வாக்கு சேகரித்தார்.

அதன்படி பிரதமர் மோடியின் திட்டத்தால் பல நகராட்சி மற்றும் மாநகராட்சி, பேரூராட்சிகளில் தாமரை மலர்ந்துள்ளது. அதே போன்று கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் 7 வார்டுகளை பாஜக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. காலம், காலமாக திராவிட கட்சிகள் பிடித்து வைத்திருந்த இடங்களையும் பாஜக வென்று காட்டியுள்ளது. இதனால் அந்த நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுத்தால் பாஜக துணையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

Tags:    

Similar News