3 எம்.பி., 29 எம்.எல்.ஏ.,வுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி!

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் என்று மொத்தம் 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றது.

Update: 2021-11-02 12:21 GMT

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் என்று மொத்தம் 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றது.

29 தொகுதிகளில் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே போன்று 9 தொகுதிகளை தங்கள் வசம் வைத்திருந்த காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அசாமில் இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் பாஜக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை வகித்தது. இரண்டு தொகுதிகளில் ஜக்கிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.

மேகாலாய மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக கட்சி ஒரு இடங்களிலும் பாஜக கூட்டணி இரண்டு இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் பாஜக ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் நடைபெற்ற ஒரு தொகுதியில் பாஜகவே முன்னிலையில் உள்ளது. மேலும், மக்களவை இடைத்தேர்தலில் தாத்ரா, நாகர் ஹவேலி தொகுதியில் சிவசேனா கட்சி முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசம், காண்ட்வா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News