தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும் வரை ஓயமாட்டேன் - ஜாமீனில் வெளியே வந்த சூர்யா சிவா சபதம்

வழக்கு போடப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பா.ஜ.க சூரியா சிவா ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

Update: 2022-07-13 10:00 GMT

வழக்கு போடப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பா.ஜ.க சூர்யா சிவா ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

தி.மு.க எம்.பி'யும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தி.மு.க'வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சமீபத்தில் பா.ஜ.க'வில் இணைந்தார், இணைந்த அவருக்கு பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் பதினொன்றாம் தேதி நெடுஞ்சாலையில் சூர்யா சிவாவின் கார் மீது ஆம்னி பஸ் மோதியது, இந்த விபத்தை தொடர்ந்து சேதமடைந்த காருக்கு ஆம்னி பஸ் உரிமையாளரிடம் பணம் கேட்டார் சூர்யா, இந்த விவகாரத்தை பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி வழக்கு பதிந்து சூர்யாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை பயன்படுத்தி சூர்யா சிவா பணம் கேட்டு மிரட்டுகிறார் என புகார் கூறி சூர்யா சிவாவை கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 17 நாட்கள் மத்திய சிறையில் இருந்தார் சூர்யா சிவா பின்னர், நீதிமன்றத்தில் ஜாமீன் முறையீடு தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஜாமினில் வெளியே வந்த அவர் தனது ட்விட்டர் பதிவில், 'தி.மு.க அரசால் தொடரப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு போராடி சாதித்து காட்டி அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும் வரை ஓயமாட்டேன்' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Source - Junior Vikatan

Similar News