பாரம்பரியத்தை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது கிடையாது ! - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டதிற்கு ஜீயர் எதிர்ப்பு !
Breaking News.
"பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது கிடையாது" என அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்துள்ளதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஹிந்துக் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது கிடையாது. எனவே, இந்த ஆணையை தமிழக அரசு நீக்க வேண்டும். பாரம்பரியம் மாறாமல் பூஜைகள் நடை பெறுவதற்கு இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவு போடுவார் என நம்புகிறோம். கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார் ஜீயர்.