தமிழகத்தில் தாலிபான் தொடர்பு 5 சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்தது மத்திய உளவுத்துறை !

Kathir News.

Update: 2021-08-17 11:00 GMT

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினருக்கு தமிழகத்தில் ஆதரவு தெரிவித்துவரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் உத்தரவை மத்திய உளவுத்துறை பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு ஏராளமான உள்நாட்டு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டவரும் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய நாட்டின் பாதுகாப்பு காரணங்களால் தலிபான்களுடன் தமிழர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை துவங்கியுள்ளது மத்திய உளவுத்துறை அமைப்பு.

தமிழகத்தில் உள்ள 5 வலைதள கணக்குகளை உளவுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த 5 வலைதள கணக்குகளை தலா ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த ஐந்து வலைதள கணக்குகளும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை பெருமளவு கொண்டாடி வருகின்றன. ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த 5 வலைதளக்கணக்குகளையும் தமிழக உளவுத்துறையினர் மத்திய உளவுத்துறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில் எந்த நேரமும் தாலிபான் அமைப்பின் தொடர்பு காரணமாக இங்குள்ள நபர்கள் உளவுத்துறை அமைப்புகளால் தூக்கப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.


Source - Asianet NEWS

Tags:    

Similar News