பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்த யூ ட்யூப் சேனல் - பா.ஜ.க சார்பில் அதிரடி புகார் !

Breaking News.

Update: 2021-08-30 15:15 GMT

பிரதமர் மோடி அவதூறாக சித்தரிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வலியுறுத்தி பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால் கனகராஜ் கூறியதாவது, "பிரதமர் மோடியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பின்னால் இருந்து கட்டியணைப்பதுபோல் ஒரு புகைப்படத்தை கடந்த 6 ஆம் தேதி Modern Times என்ற யூ-டியூப் நிறுவனம் வெளியிட்டு வைரலாக்கியுள்ளது. இச்செயல் அவர்களின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களின் பின்னால் இருக்கும் யாருடைய தூண்டலின் பேரில் செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

இதனால் நடவடிக்கை எடுக்க கூறி காவல் துறை ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News