கருணாநிதி கூட உயிர் பிழைக்க தனியார் மருத்துவமனைக்குதானே போனார்? - அரசு மருத்துவமனை தரம் குறித்து கேள்வி எழுப்பிய தங்கர்பச்சான் !

மருத்துவத் திட்டங்களைக் கொண்டுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்?

Update: 2021-08-28 07:15 GMT

"கருணாநிதி கூட உயிர் பிழைக்க தனியார் மருத்துவமனைக்குதானே போனார்" என அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.

இது தொடர்பாக அவர் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "ஒரு மனிதன், அவன் வாழ்நாளில் அதிகம் செலவிடுவது கல்விக்கும் மருத்துவத்துக்கும்தான். அரசு கல்வியைக் கொடுத்தாலும் ஏன் எல்லோரும் தனியாரையே அதிகம் நாடுகிறார்கள் ?

மக்களின் வரிப்பணத்தில் 50 விழுக்காட்டுக்கு மேல் அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது. அரசு ஊழியர்களே அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. எந்த அரசியல்வாதி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கிறார் ?

ஒவ்வோர் அரசியல்வாதியும் தனித்தனியாகப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளை வைத்திருக்கின்றனர். இதனாலேயே மருத்துவமும், கல்வியும் வணிகமாகிவிட்டது. அவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக மக்களைக் கொன்று கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு எத்தனையோ திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், அவர் உயிர் பிழைக்கத் தனியார் மருத்துவமனைக்குத்தானே சென்றார் ? ஏராளமான மருத்துவத் திட்டங்களைக் கொண்டுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்?

அரசு ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் சேவை கட்டாயமாக்கப்பட்டால், அவர்களுக்காகவாவது அவற்றின் தரம் உயர்த்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

Twitter

Tags:    

Similar News