"பிரதமராகும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது" - மீண்டும் பாராட்டு விழாக்களை துவங்கிய தி.மு.க !

Breaking News.

Update: 2021-08-24 15:00 GMT

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் துதி பாடல்களை பாடத் துவங்கும் தி.மு.க கட்சியினர்.

கடந்த 200'ம் ஆண்டு முதல் 2011'ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் தி.மு.க'வின் நிகழ்வுகளை பட்டியலிட்டால் அதில் அதிகபட்சம் பாராட்டு விழாக்களே மிஞ்சும். கருணாநிதியை நடுநாயகமாக உட்கார வைத்துகொண்டு "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என துதி பாடுவதை முழுநேர பணியாக தி.மு.க'வினர் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றினர். இதில் திரைத்துரையினர் மட்டுமின்றி தி.மு.க கட்சியினரும் அடக்கம். இந்த ஒரு காரணம் கூட தி.மு.க அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் அமர முடியாது போன முக்கிய காரணம்.

ஆனால் இதையே திரும்ப ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க மீண்டும் பின்பற்ற துவங்கிவிட்டது. நேற்று சட்டசபையில் துரைமுருகனை நடுநாயகமாக வைத்து "துரைமுருகன்'தான் எல்லாமே என்கிற ரீதியில் பாராட்டுவிழாவை சட்டசபையில் எடுத்தனர்.

அதுபோலவே இன்று 'ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக முதலமைச்சரின் திட்டங்கள் இருப்பதால் பிரதமராகும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது' என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனோ ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் வறுமையில் வாடுவதிலும், வாக்குறுதிகளை அள்ளி தெளித்துவிட்டு ஆட்சியை பிடித்திருக்கிறோம் என்ற நினைப்பும் கொஞ்சம் கூட இல்லாமல் தி.மு.க மீண்டும் துதி பாடலை கையில் எடுத்துள்ளது. இதுவரை வெளியில் அரங்கங்களை பிடித்து பாராட்டு விழா நடத்திய தி.மு.க இந்த முறை சட்டசபையை பாரட்டு விழா மேடையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.


Source - Asianet NEWS

Tags:    

Similar News