அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் தி.மு.க - கொதிக்கும் ஓ.பி.எஸ் !

Breaking News.;

twitter-grey
Update: 2021-08-31 12:30 GMT
அரசியல்  காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் தி.மு.க - கொதிக்கும் ஓ.பி.எஸ் !

"பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதாவின் திருப்பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு" என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கடுமையாக சாடியுள்ளார்.

கலைவாணர் அரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, "பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதாவின் திருப்பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு. இன்று சட்டமன்றத்தில் பல்கலைக்கழக பெயர் மாற்ற மசோதா குறித்து பேசுவதற்கான வாய்ப்பு கேட்டோம் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்தியாவில் உள்ள முதல்வர்களில் கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர் ஜெயலலிதா. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை மாற்றங்களை கொண்டு வந்தார். 2011ல் மாநில அரசின் வருவாயில் 4ல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கினார். மாணவர்களுக்கு 16 வகை இலவச உபகரணங்கள் தந்தவர் ஜெயலலிதா.

அண்ணாமலை பல்கலைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது நிதி ஒதுக்கி காப்பாற்றியவர் ஜெயலலிதா. அம்மா உணவகம் பெயரை மாற்றவில்லை என்கிறீர்கள், இன்று இருக்கும் பிரச்சனை விழுப்புரம் பல்கலை பெயர் பிரச்சனைதான். இப்போதுதான் பல்கலையை உருவாக்கினோம். அதற்கான நிதி, இடத்தை ஒதுக்க வேண்டியது தற்போதைய அரசின் வேலை" என்று கூறினார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News