"சொன்னா கேளுங்கப்பா, அவ்ளோதான் லிமிட்" - துதிபாடிய எம்.எல்.ஏ'க்களால் கடுப்பான ஸ்டாலின் !

Assembly News.

Update: 2021-08-28 16:00 GMT

"இதுகுறித்து நான் எச்சரிக்கை விடுத்தேன், ஆனால் இது இன்றும் தொடர்கிறது, எதையும் ஒரு லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள்" என தி.மு.க எம்.எல்.ஏ'க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் மக்கள் பிரச்சினைகள் பேசுவதையும், திட்டங்களை பற்றி பேசுவதையும் விடுத்து முதல்வர் ஸ்டாலின் பற்றி புகழ் பாடுவதையும் அதைவிட அதிகமாக முதல்வரின் மகனை பற்றி புகழ் பாடுவதையும் குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

அதுபோலவே இரு தினங்கள் முன் 'ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக முதலமைச்சரின் திட்டங்கள் இருப்பதால் பிரதமராகும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது' என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தன் பொறுப்பை உணர்ந்து துதி பாடினார்.

இந்த வரிசையில் இன்று சட்டப்பேரவையில் மீண்டும் துதி பாடலை துவங்கியுள்ளது தி.மு.க, இன்று ஏ.வ வேலு அவர்கள் பாடிய துதியில்

"திரையுலகில் இருந்து வந்த எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினராகி முதல்வராகினார், தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார். அந்த வரிசையில் தான் தம்பி உதயநிதி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்" சற்று தூக்கலாகவே பாடினார்.

அடுத்த ஒரு சமயத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் பாடிய துதியில், "எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்கு வரும் போது குழந்தைகளுடன் மக்கள் 3 நாட்கள் காத்திருப்பார்கள்; அதே போல் உதயநிதிக்காக மக்கள் காத்திருந்தனர்" என துதி பாடினார் திருவையாறு எம்.எல்.ஏ.

மற்றொரு தருணத்தில் கடந்த வாரம் சட்டசபையில் துரைமுருகனை நடுநாயகமாக வைத்து "துரைமுருகன்'தான் எல்லாமே என்கிற ரீதியில் பாராட்டுவிழாவை சட்டசபையில் எடுத்தனர்.

இதனை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் "சட்ட முன்வடிவு, கேள்வி நேரத்தில் தலைவர்களை பாராட்டி பேசக்கூடாது" என அறிவித்தார் ஆனால் அவரது பேச்சை பொருட்படுத்தாது மீண்டும் துதி பாடுவதில் தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் குறியாக இருந்ததால் கடுப்பான ஸ்டாலின் இன்று விவாதத்தின்போது "என்னை புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மானிய கோரிக்கையின் போது நேரத்தில் அருமை கருதி அதை தவிர்க்க வேண்டும் என்று நேற்றே இதுகுறித்து நான் எச்சரிக்கை விடுத்தேன், ஆனால் இது இன்றும் தொடர்கிறது, எதையும் ஒரு லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News