கிரிவலம் செல்ல தடை - ஆனால் நாளை திரையரங்குகள் திறப்பு !

Breaking News.

Update: 2021-08-22 06:15 GMT

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

கொரோனோ இரண்டாம் அலையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அறித்துள்ளது. கொரோனோ இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் துவக்கம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்பொழுது கொரோனோ பரவல் குறைவாக இருப்பதாக காரணம் காட்டி திரையரங்குகளை அரசு திறக்க அனுமதியளித்துள்ளது

பக்தியுடன் கோவிலுக்கு வருவதை கொரோனோ பரவலை காரணம் காண்பித்து அனுமதி மறுத்துவிட்டு படம் பார்க்க ஏதுவாக திரையரங்குகளை அனுமதிப்பதை பக்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மூடிய திரையரங்கிற்குள் பரவாத கொரோனோ கிரிவலப்பாதையில் பரவிடும் என்பதே அரசின் அறிவார்ந்த அறிவிப்பாக இருக்கிறது.

Tags:    

Similar News