"வலிமை சிமெண்ட் வரட்டும் பாருங்க" ஆருடம் கூறும் அமைச்சர் தங்கம் தென்னரசு !
Breaking News.
'வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வந்த உடன், வெளிச் சந்தைகளில் மற்ற சிமெண்ட் மூட்டைகளின் விலை வெகுவாக குறையும்' என ஆருடம் கூறியுள்ளார் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
இன்றைய கேள்வி நேரத்தில் கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார். இதற்கு சமாளித்து பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, "கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 490 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை, அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் 420 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அரசின் டான்செம் நிறுவனத்தின் ஆலைகள் மூலம் சிமெண்ட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அரசு சிமெண்ட் வலிமை என்ற பெயரில் விற்பனைக்கு வர உள்ளது என்றும், விரைவில் வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வந்த உடன், வெளிச் சந்தைகளில் மற்ற சிமெண்ட் மூட்டைகளின் விலை வெகுவாக குறையும்" என்றும் அமைச்சர் கூறினார்.
ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் சிமென்ட் மூட்டையிட் விலை சராசரியாக 400 ரூபாய் அளவில் இருந்தது. தி.மு.க ஆட்சியமைத்த பிறக் மெல்ல 490 ரூபாய்க்கு உயர்ந்தது குறிப்பிடதக்கது.