பூனை எலிய தூக்கிட்டு போற மாதிரி இருக்கு இதெல்லாம் பட்ஜெட்டா? - சட்டசபையில் சீறிய ஆர்.பி.உதயகுமார் !

ஆர்.பி.உதயகுமார் சட்டசபையில் இன்று தி.மு.க'வின் நிதிநிலை அறிக்கையை பற்றி விமர்சித்துள்ளார்.

Update: 2021-08-16 10:00 GMT

"தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது" என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டசபையில் இன்று தி.மு.க'வின் நிதிநிலை அறிக்கையை பற்றி விமர்சித்துள்ளார்.

தி.மு.க ஆட்சியில் முதல் பட்ஜெட் கடந்த 13'ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது, இதனையடுத்து இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் இன்று சட்டசபையில் நடந்தது.

அப்போது பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், "ஆகஸ்ட் 9'ம் தேதி வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை பார்த்தோம். அரசின் நிதி நிலையை சரிசெய்ய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு அறிக்கையை தயார் செய்யும் போது, தாய் பூனை குட்டி பூனையை வாயில் கவ்வுவது போல் தாய் பாசத்தோடு இருக்க வேண்டும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது" என விமர்சித்துள்ளார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News