உதய சூரியனில் போட்டியிட முடியாது.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ.!

உதய சூரியனில் போட்டியிட முடியாது.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ.!

Update: 2021-01-01 14:58 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கடசிகள் கடந்த சில மாதங்களாகவே கட்சி வேலைகளை கவனித்து வருகிறது.

வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு அந்த தலைமை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. அதாவது வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு மதிமுக, மற்றும் விசிக போன்ற கட்சிகள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஒரு அரசியல் கட்சி நடத்தி வருகிறோம் நம்மளையே இப்படி மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட சொல்கிறார்களே என பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் நலக்கூட்டணி உருவாக வாய்ப்பே இல்லை என பதிலளித்தார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிட விரும்புகிறது என்று சற்று காட்டமாக பதில் அளித்தார்.

இவரது பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒரு கூட்டணியில் உள்ள கட்சியினர் தங்களது சின்னத்தில்கூட நிற்க முடியவில்லை என்றால் எதற்காக அவர்கள் அரசியல் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News