பணபரிமாற்ற முறைகேடு வழக்கில் விசாரணைக்காக சென்ற சோனியா காந்திக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - காங்கிரஸரின் விசுவாசம்

Update: 2022-07-22 07:08 GMT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது. இவரை விசாரணை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அதே போன்று சென்னையில் உள்ள எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு மற்றும் தொண்டர்கள் என 1000 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News